Friday, March 11, 2011

1. பூந்துறைநாடு:

1.     பூந்துறைநாடு:
பூந்துறைநாட்டின் காவேரிக்கு மேற்கில் உள்ளபகுதி மேல்கரை பூந்துறைநாடு எனவும், கிழக்கிலுள்ள பகுதி கீழ்கரை பூந்துறைநாடு எனவும் வழங்கப்படுகிறது.

A. மேல்கரை பூந்துறை நாடு:
பவானிநொய்யல் இரண்டு படுகைகளுக்கும் இடைப்பட்ட minor river basins உடையதே மேல்கரை பூந்துறைநாடு. இன்னாடு மேலும் நான்கு சமஸ்தானப் பிரிவுகளாக உள்ளது.


மேல்கரை பூந்துறைநாடு ஊர்த்தொகை:





இன்றைய சர்க்காரின் பிரிவினை வேலையால் மேல்கரை பூந்துறைநாட்டின் ஒரு பகுதி ஈரோடு தாலுகாவிலும், மற்றொரு பகுதி பெருந்துறை தாலுகாவிலும் உள்ளது.


ஈரோடு தாலுகா பகுதி:
பெருந்துறை தாலுகா பகுதி:


http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=178
 நண்ணாவுடையார் உலகுடையார்
(48)



தென்னார் மதுரைச் சீராம ராமர் செழுங்கிரியில்
பொன்மாரி பெய்திடும் பூந்துறை நாடதும் பூவணையும்
ஒன்மான மாகிய நண்ணா வுடைய குலகுடையார்
மன்னார் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே.

a. முதலூர்அவல்பூந்துறை (பாரசீகம்: அவல் = முதல்பூந்துறை ராசாம்பாளையம் (தற்பொழுது காரூத்துப்பாளையம்)
b. வெள்ளோடுஉலகபுரம்
c. நசியனூர் - சாமிக்கவுண்டன்பாளையம்
d. எழுமாத்தூர்அவலூர் - “அவல்ஊர் (பாரசீகம்: அவல் = முதல்)




இந்நான்கு பெரியவீட்டாருக்கும் மேல்கரை பூந்துறை நாட்டின் தலைமை ஸ்தலமான சென்னிமலையில் மடங்களும் உரிமைகளும் உள்ளன.



a. பூந்துறைநன்னாவுடையார் (நன்னாடு உடையார்) :


நண்ணாவுடையார் உலகுடையார்

தென்னார் மதுரைச் சீராம ராமர் செழுங்கிரியில் 
பொன்மாரி பெய்திடும் பூந்துறை நாடதும் பூவணையும் 
ஒன்மான மாகிய நண்ணா வுடைய குலகுடையார் 
மன்னார் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே.


 பூந்துறை இரண்டு பிரிவுகளாக உள்ளது. அவல் பூந்துறைமுதல் பூந்துறை, துய்யம் பூந்துறைஇரண்டாம் பூந்துறை. இவ்வூரே கொங்கதேசத்தின் முதல் ஊராக வழங்கி வருகிறது. இவ்வூர் சாகாடை கோத்திரத்தார் (காடை கூட்டம்) ஆதிகாணியாகும். அவல் பூந்துறைக்குள்ளிருக்கும் காரூத்துப்பாளையமே பூந்துறை பட்டக்காரரது ஊராகும். இவர் இரு கரைகளிலிருக்கும் பூந்துறை நாட்டிற்கும் பெரியபட்டக்காரர். மேலும் கொங்கதேச தலைமை ஸ்தலமான கருவூர் பசுபதீசருக்கு கலசம் வைப்பதும், அரசரான சேரமானுக்குப் பட்டம் சூட்டி வைப்பதும், இருபத்திநான்கு நாட்டாருக்கும் பட்டம் சூட்டிவைப்பதும் இவரே. ஆதியானதும், பெரியதும், வளமையானதுமான பூந்துறை நன்னாட்டை உடையவராதலால் நன்னாடு உடையார் என்ற பட்டம் ஆதியில் சேரனால் அளிக்கப்பட்டது. கொங்கு மண்டல சதகப் பாடல்களிலும், ஆவணங்களிலும், பட்டயங்களிலும், கல்வெட்டுகளிலும் இவரது பெயரைப் பரவலாகக் காணலாம். தீரான் சின்னமலைக்குப் பக்கபலமாகவும், அபயம் அளித்தவருமான வம்சத்தவர். அப்போராட்டத்தால் வெள்ளையர்கள் அனைத்து அதிகாரத்தையும் பிடுங்கிக்கொண்டனர். அப்போராட்டத்தில் உயிரைத்தவிர அனைத்தையும் இழந்தவர்கள்.





தற்போதைய பட்டக்காரர் வாரிசு: கொங்க 24 நாட்டு பெரியவீட்டுக்காரர், வடக்குத்தலைவாசல் ஆறுநாட்டார், பூந்துறை நாட்டு பெரிய வீட்டுக்காரர், பூந்துறை பெரியவீட்டார், அவல் பூந்துறை பெரியவீட்டார், காரூத்துப்பாளையம் பரம்பரை மணியகாரர் ஸ்ரீமான் குருசேவ் (எ) ஸ்ரீமான் வாரணவாசி நன்னாவுடையார் அவர்கள்.


b. வெள்ளோடு: உலகபுரம் பட்டக்காரர் உலகுடையார்

இவர் வெள்ளோடு சமஸ்தான பட்டக்காரர். பூந்துறை நாட்டுக்கு இரண்டாவது பட்டம். உலகுடையார் பற்றிய செய்திகள் கொங்கு மண்டல சதகம், பட்டயங்கள், ஆவணங்களில் ஏராளம் உள்ளன. தீரன் சின்னமலை தங்கை மக்கள். சின்னமலைக்காக உயிர் கொடுத்தவர்கள். தென்முகம் வெள்ளோடு உலகபுரம் கரை சாத்தாந்தை கோத்திரத்தார்


உலகுடை மன்றாடி - வெள்ளோடு

பூத்தந்த வானமும் சந்தன மாதும் புனலொழிந்து 
தேய்த்தந்த முன்கையிற் சந்தனம் வாரிச் சிவன் மெயினிற் 
சாத்தந்தை கோத்திர னுலகுடை யான்செய் தவம்பெருக 
வாய்த்தந்தக் கீர்த்தி தனைப்படைத் தான்கொங்கு மண்டலமே

 இவரது அன்னையார் (சின்னமலை பேத்தி) மற்றும் உலகுடையாரது சகோதரர்கள். உலபுரத்திற்கு கடந்த தலைமுறை வரை ஓடாநிலையில் சின்னமலையின் வாரிசுகளோடே கொள்வினை கொடுப்பினைகள் நடந்து வந்தன.




c. நசியனூர்: நசியனூர்  பட்டக்காரர் ராயர் 
சாமிக்கவுண்டம்பாளையம் மொடாக்கன்ன கோத்திரத்தார் (தீரன் சின்னமலை போரில் தியாகம் செய்தவர்கள்). நசியனூரில் சின்னமலை மறைவுக்குப் பின்னரும் போராடியதால் வெள்ளையர்களால் ஆள் வைத்து கொல்லப்பட்டவர்கள்.
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up




தற்போதைய நசியனூர் பட்டக்காரர்: 
சுப்பிரமணியம் (எ) பொறப்பண  ராயர்
அரண்மனைக்காடு, 
சாமிக்கவுண்டன்பாளையம்

d. எழுமாத்தூர்:  நல்லகுமாருடையார் என்ற பட்டம், எழுமாத்தூர் பனங்காடை கோத்திரத்தார் அவலூர் பட்டம் (தீரன் சின்னமலை போரில் தியாகம் செய்தவர்கள்). துரோகிகளால் அவலூர் அழிக்கப்பட்டு, தற்பொழுது வாரிசுகள் செட்டிபாளையம் (கவுந்தப்பாடி) – [காஞ்சிக்கோயில் செம்ப கோத்திர நாட்டாருக்கும், நசியனூர் மொடாக்கன்ன கோத்திர சமஸ்தானாதிபதி கவுண்டர்களுக்கும் மாப்பிளையாகச் சென்றவர்கள்], தொட்டிபாளையம் (பவானி),  எழுமாத்தூர் ஆத்திக்காட்டுவலசு, குன்னாங்காட்டுவலசு, காரைக்காட்டுவலசு, கொளிஞ்சிக்காட்டுவலசு, புதுப்பாளையம், கூட்டப்பள்ளி முதலான ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர்.
https://archive.org/stream/SouthIndianRebellion/South%20Indian%20Rebellion#page/n115/mode/2up




வெள்ளையர் ஆதிக்கம் கொங்கத்தில் வராமலிருக்க பூந்துறை நாட்டார்களே தீரன் சின்னமலைக்குப் பக்கபலமாக இருந்தனர். இதனால் இன்று வெள்ளையர்கள் மறைமுக ஆட்சியிலும் அழித்தோழிக்கப்பட்டுள்ளனர்.

B. கீழ்கரை பூந்துறை நாடு: மோரூர் காங்கயர்
இன்னாட்டின் தலைமை மோரூராகும். நல்லபுள்ளி அம்மனை வழிபடும் மோரூர் கன்ன கோத்திரத்து காங்கயரே நாட்டார். இன்னாட்டினுக்குக் கீழ் இரண்டு சின்னப்பட்டங்கள். இதற்கடியில் தாயாதிப்பட்டம் முளசி கன்ன கோத்திரத்தாரில் அன்னத்தியாகி .


கீழ்கரைப் பூந்துறை நாடு ஊர்த்தொகை:


சங்ககிரி தாலுகாவில் கீழ்கரை பூந்துறை நாட்டுப் பகுதி:

திருச்செங்கோடு தாலுகாவில் கீழ்கரை பூந்துறைநாட்டுப் பகுதி:
மொளசி தாயாதி நாட்டுக்கவுண்டர் அரண்மனை பட்டக்காரர் ஸ்ரீமான்  பழனிவேல்   அன்னத்தியாகி அவர்களுடன்  குலகுரு சன்னிதானம்  
தீக்ஷிதர் அவர்கள்


a. பருத்திப்பள்ளி இணை நாடு: முதலிக்காமிண்டன் பருத்திப்பள்ளி செல்ல கோத்திரத்து முதலிக்காமிண்டன் இணைப்பட்டம்
அவருக்குக்கீழ் உப பட்டம் i. மல்லசமுத்திரம் மல்லை நாட்டார் - தொண்டைமான் 


பருத்திப்பள்ளி நாடு ஊர்த்தொகை:


திருச்செங்கோடு தாலுகாவில் பருத்திப்பள்ளி நாட்டுப் பகுதி:

ராசிபுரம் தாலுகாவில் பருத்திப்பள்ளி நாட்டுப் பகுதி:

சேலம் தாலுகாவில் பருத்திப்பள்ளி நாட்டுப்பகுதி:





 
சங்ககிரி தாலுகாவில் பருத்திப்பள்ளி நாட்டுப் பகுதி:

b. ஏழூர் இணை நாடு: ஏழூர் பண்ணை கோத்திரத்து நாட்டாரே இரண்டாம் இணைப்பட்டம்.


ஏழூர் நாடு ஊர்த்தொகை:


திருச்செங்கோடு தாலுகாவில் ஏழூர் நாட்டுப் பகுதி:
 நாமக்கல் தாலுகாவில் ஏழூர் நாட்டுப் பகுதி:


5 comments:

  1. Great News Thanks for sharing......

    ReplyDelete
  2. தருமபுரியில் உள்ள பூந்துறை காடை குலத்தினர் பற்றி தகவல் குறிப்பிடவும்

    ReplyDelete
  3. நான் சேர குல வேள்ளாளர் வாத்தியார் என்பார்கள் புலவர்கள் எங்களில் பலர் உள்ளனர்.எங்களுக்கும் சேரமன்னருக்கும் உள்ள தொடர்பை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.தில்லாபுரியம்மனை வணங்கி வருகிறோம்

    ReplyDelete